மலைக்க வைத்த ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை : ஒரே மாதத்தில் கோடி கோடியாக கொட்டிய பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2023, 11:38 am

மலைக்க வைத்த ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை : ஒரே மாதத்தில் கோடி கோடியாக கொட்டிய பக்தர்கள்!!

கடந்த ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான வழிபட்ட நிலையில் அவர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் 114 கோடியே 14 லட்சம் ரூபாய் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் ஒரு கோடியே ஒரு லட்சம் லட்டு பிரசாதம் திருப்பதி மலையில் விற்பனை ஆகி உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானுக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

  • secret relationship with VJ's Priyanka பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!