காட்டு யானையிடம் குடிபோதையில் சேட்டை செய்த நபர்… வைரலான வீடியோ.. இறுதியில் நடந்த சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
12 May 2023, 3:53 pm

தர்மபுரி ; சாலையோரம் நின்றிருந்த காட்டு யானையிடம் குடிபோதையில் இருந்த நபர் செய்த செயல் வைரலான நிலையில், வனத்துறையினர் ஆக்ஷனில் இறங்கியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சாலையில் போதையில் இருந்த நபர் ஒருவர் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த காட்டு யானைக்கு வணக்கம் தெரிவித்தும், இரண்டு கைகளை தூக்கியவாறு அதனை வணங்குவது போன்று யானையை அச்சுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

வழக்கமாக யானைகள் மனிதர்களை துரத்தும் அல்லது சில யானைகள் மனிதர்களை தாக்கும். ஒகேனக்கல் சாலையோரம் இருந்த இந்த யானை போதையில் இருந்த நபரை எதுவும் செய்யாமல் அவர் செய்த சேட்டையை பொறுத்துக் கொண்டு அங்கிருந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியது

இந்தநிலையில், அந்த வைரல் வீடியோவை வைத்து அந்த நபர் யார் என வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் பென்னாகரம் அருகே உள்ள எட்டிக்குட்டையை சேர்ந்த மீசை முருகேசன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை தற்போது கைது செய்த வனத்துறையினர் அவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!