கடைசி பந்தில் சிக்சர்… முதல் சதத்தை பதிவு செய்த SKY… மும்பையின் ஆட்டத்தை பார்த்து மிரண்டு போன அந்த 4 அணிகள்..
Author: Babu Lakshmanan12 May 2023, 9:43 pm
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் மும்பை அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ்.
வான்கடே மைதானத்தில் நடந்து வரும் இன்றைய லீக் போட்டியில் மும்பை – குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (29), இஷான் கிஷான் (31) சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல அதிரடியை காட்டினார். மறுமுனையில் இளம் வீரர் விஷ்னு வினோத் (30) தனது பங்கிற்கு ரன்களை சேர்த்தார்.
விக்கெட்டுக்கள் ஒருபுறம் சரிந்தாலும் தான் சிக்ஸர் அடிப்படை சூர்யகுமார் யாதவ் நிறுத்தவில்லை. இறுதி பந்தில் சதம் அடிக்க 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்சர் அடித்து, தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
அவரது அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித்கான் 4 விக்கெட்டுக்களையும், மொகித் ஷர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் சதம் (103 நாட் அவுட்) அடித்த சூர்யகுமார் யாதவ், குஜராத்திற்கு எதிராக ஒரு வீரர் குவித்த முதல் அதிகபட்ச ஸ்கோர்ர் மற்றும் மும்பை அணியின் அதிகபட்ச ஸ்கோராக(218) இது அமைந்துள்ளது.
இந்தப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெறும் பட்சத்தில் லக்னோ, பெங்களூரூ, கொல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்கான பிளே ஆஃப் வாய்ப்பு சற்று மங்கிவிடும். அதேவேளையில், இன்றைய போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால், முதல் அணியாக பிளே ஆஃப்பிற்கு தகுதி பெறும்.