முதல்ல அப்பா யாரு? அத சொல்லு…திருமணம் செய்யாமல் கர்ப்பமான இலியானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
Author: Shree13 May 2023, 2:53 pm
தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் அவருக்கு நல்லாவே கைகொடுத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாட்டுக்கு அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருந்த நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து, உடல் எடை கூடிய அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், அடிக்கடி பிகினி ஆடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து “விரைவில் வரவுள்ளது. என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” என தெரிவித்திருந்தார்.அவர் வெளியிட்ட புகைப்படத்தில், குழந்தைகளின் உடைகளை வெளியிட்டு, அதில், சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் படும்படியான எழுதப்பட்ட வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த பதிவை பார்க்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை சொல்லினர்.
இந்நிலையில் கர்ப்பமான வயிறு நன்றாக தெரியும்படி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார். இருந்தாலும் இந்த குழந்தைக்கு யார் அப்பா என்பதை அவர் இதுவரை தெரிவிக்கவே இல்லை.