என்ன பண்ணாலும் முடி கொட்டிக்கிட்டே இருக்கா… உங்களுக்கு தான் இந்த கற்றாழை ஹேர் பேக்!!!

Author: Hemalatha Ramkumar
13 May 2023, 3:38 pm

இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வு என்பது பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனையாகும். தினமும் முடி உதிர்வு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதிகப்படியான முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உள்ளது.

எனினும் முடி உதிர்வு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முடி உதிர்வை சமாளிக்க ஏராளமான இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கற்றாழை ஹேர் பேக். கற்றழையானது தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

கற்றாழையில் காணப்படும் குளிர்ச்சியான பண்புகள் மயிர்க்கால்களை ஆற்றி வீக்கத்தை குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. அதோடு பொடுகு தொல்லையிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.

இப்போது முடி உதிர்வை சமாளிக்க உதவும் கற்றாழை ஹேர் பேக்கை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் கற்றாழை சாறு, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை கட்டிகள் எதுவும் இல்லாதவாறு கலந்து கொள்ளவும். இதனை உங்கள் முடி மற்றும் மயிர்க்கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை வெதுவெதுப்பான நீரில் அலசி கொள்ளலாம்.
இதனை வாரம் இரண்டு முறை பயன்படுத்துங்கள். இதனை அனைத்து வகையான தலைமுடிக்கும் ஏற்றது. இது ஒரு கண்டிஷனராகவும் செயல்படுவதால் இதனை பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கற்றாழையில் தலைமுடி மற்றும் மயிர்க்கால்களை வலிமைப்படுத்தக்கூடிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. மேலும் தலைமுடியின் இயற்கையான ஈரப்பதத்தை பூட்டுவதன் மூலமாக முடி உதிர்வை தடுக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vijay TV VJ Priyanka's 2nd marriage... Viral video!விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!