விஜய்யும், நானும் அந்த படத்துல ரொமான்ஸ் சீன்ல.. த்ரிஷா ‘கலகல’ பேட்டி..!

Author: Vignesh
13 May 2023, 5:30 pm

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார்.

அதோடு பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ, கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், வஸந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லலித் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார். பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கதாநாயகிகளால் சினிமா துறையில் நீடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்

trisha - updatenews360 1

மேலும், பள்ளி காலத்திலேயே மாடலிங் துறையில் கால்பதித்த த்ரிஷா, மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் பட்டங்களை வென்று சாதனை படைத்தார். தமிழ் சினிமாவில்‘லேசா லேசா’ திரைப்படத்தில் மூலம் ஒப்பந்தமானார் நடிகை த்ரிஷா அதற்கு முன்னதாகவே ‘மெளனம் பேசியதே’ படத்தின் வாயிலாக பரிச்சயமானவர்.

மேலும், முன்னணி நடிகர்களான அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக த்ரிஷா வலம் வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் – 2’ படத்தில் த்ரிஷா நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், தற்போது ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இந்நிலையில், ஒரு சேனலுக்கு நடிகை த்ரிஷா பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், நடிகை த்ரிஷா பல்வேறு சுவாரஸ்யமான உண்மைகளை தெரிவித்துள்ளார். படத்தில் நடிக்கும்போது நடிகைகளுக்கு கிளாமர் வெவ்வேறாக இருக்கும் என்றும், எல்லாருக்குமே வித்தியாசம் இருக்கும் எனவும், கிளாமர் என்பது கவர்ச்சியோ, செக்ஸியோ மட்டும் கிடையாது என்றும், தான் கிளாமரில் நடிக்க யோசித்துல்லாம் செய்ய மாட்டேன் என்றும், அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தா கிளாமராக நடிப்பேன் எனவும், இல்லையென்றால் சில நேரங்களில் தனக்கு அது சங்கடமாக அமைந்துவிடும் என்றும், தனக்கு அந்த கிளாமர் நடிப்பு பிடிக்கவில்லையென்றால் அது அப்படியே திரையில் தெரியும் என தெரிவித்துள்ளார்.

vijay trisha -updatenews360

மேலும், ‘கில்லி’ படத்தில் அந்த கலங்கரை விளக்கத்தில் நடிப்பது பற்றி தொகுப்பாளர் கேட் கேள்விக்கு, த்ரிஷா பேசுகையில்,

அந்த சீன் எடுக்கும் போது இரவு 2 மணிக்கு என்றும், தனக்கும், விஜய்க்கும் நல்ல தூக்கம் வந்ததாகவும், ரெண்டு பேரும் நல்லா தூங்கு மூஞ்சா இருந்ததாகவும், இயக்குநர் வந்து தங்களிடம் அய்யோ… இது ரொமான்ஸ் சீன் என்றும், இரண்டு பேரும் தூங்குறீங்கன்னு வந்து கூறியதாகவும், அந்த சீனுக்காக 15 மணி நேரமாக ஷூட் பண்ணிட்டிருந்தாங்க என்றும், தங்களுக்கு ரொம்ப கலைப்பாகிவிட்டது எனவும், ஆனால், திரையில் பார்க்க ரொம்ப அழகா இருக்கும் எனவும், நமக்குத்தான் தெரியும் அந்த நேரத்தில் எப்படி இருந்தோம் என்றும், ரொமான்ஸ்லாம் ரொம்ப கஷ்டம். ஆனா… அதை செய்துதான் ஆக வேண்டும் என த்ரிஷா தெரிவித்துள்ளார்.

vijay trisha -updatenews360
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!