ஆசை துடியா துடிக்குது… விஜய் தான் வேணும்… அந்த விஷயத்துக்காக ஏங்கும் பிரபல இளம் நடிகை!
Author: Shree13 May 2023, 8:28 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தன் அப்பா எஸ்ஏ சந்திர சேகரின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பதில் பல கேலி,கிண்டலுக்கு ஆளான விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டு தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இடத்தை பிடித்தார். குறிப்பாக இவரது நடிப்பு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.
செட்டில் கூட மிகவும் அமைதியாக ஒன்றுமே தெரியாதவர் போல் இருப்பார். ஷாட் ரெடி என்றதும் வேறு விஜய்யை பார்க்க முடியும் என அவருடன் நடித்த நடிகர்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் தெலுங்கு திரைத்துறையின் பிரபல இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி விஜய்க்கு ஜோடியாக தளபதி நடிக்கும் 68வது படத்தில் நடிக்க உள்ளாராம்.
இதனை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இது குறித்து கீர்த்தி ஷெட்டியிடம் கேட்டதற்கு, நான் முன்னர் சொன்னதே தான் இப்போவும் சொல்றேன். எனக்கு விஜய்யுடன் நடிக்க ஆசை அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் அதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன். ஆனால் இந்த விசயம் எனக்கே தெரியாது . அப்படி நடந்தால் ரொம்ப சந்தோஷம் என கூறியுள்ளார். சமீப நாட்களாக அக்கட தேசத்து நடிகைகளான மாளவிகா மோகனன், பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா போன்ற நடிகைகளுடன் நடித்து வரும் விஜய்யும் ஒரு முறை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க ஆசைப்படுகிறராம்.