ஆளுநருக்கு எதிராக அதிர்ச்சி கொடுத்த திராவிட விடுதலை கழகம்… குண்டுக்கட்டாக கைது : பழனியில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2023, 1:01 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னைதரசா பல்கலைக்கழகத்தில் நிகழ்சிகளுக்காக இரண்டு நாட்கள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று மாலை 4 மணிக்கு வருகை தருகிறார்.

இதற்காக வத்தலகுண்டு சாலை வழியாக கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு மேலே செல்லவும் ,கீழே இறங்கி செல்லவும் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து தடை செய்யட்டுள்ளது. பின்னர் ஆளூநர் இரவு தங்குகிறார், நாளை காலை நடைபெறும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு ,மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பழனியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் கொடைக்கானல் நகருக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ரவியை கண்டித்தும் கருப்பு கொடி காட்ட முயன்றனர்.


தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராகவும் தமிழ் மொழிக்கு எதிராகவும் ஆளுநர் ரவி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆளுநர் ரவிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த , உள்ளிட்ட நிர்வாகிகளை கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட செல்ல முயன்ற நிலையில் பழனி -கொடைக்கானல் சாலையில் சோதனை சாவடியில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மேலும் திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆளுநருக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு வாகனத்தில் ஏறி தனியார் மண்டபத்தில் அடைக்கபட்டனர் …

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!