‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை அதிர்ச்சி மரணம்..- தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்..!

Author: Vignesh
15 May 2023, 5:15 pm

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் கொண்டு TRPயில் இடம்பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. ஒரு சராசரி பெண்மணி குடும்பத்தில் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்ப்புகள் குறித்து எதார்த்தமாக அமைக்கப்பட்டது.

bharathi kannama- updatenews360

இந்த தொடர், நாளடைவில் ஜவ்வு போல இழுப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வந்தனர்.

bharathikannammaserial_updatenews360

இந்நிலையில், புதிய கதைகளத்துடன் ‘பாரதி கண்ணம்மா 2’ சீரியல் உருவாகி உள்ளது. இந்த 2-ம் பாகத்தில் சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் நடித்து வந்த சிபு சூரியன் ஹீரோவாக நடிக்கிறார். வினுஷா தேவி மீண்டும் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். மேலும், கதை முற்றிலும் முதல் பாகத்திற்கு சம்மந்தம் இல்லாமல் இருப்பது போல தெரிகிறது.

bharathi kannama- updatenews360

முதல் சீசனில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து வந்தவர் விஜயலட்சுமி. 70 வயதான இவர் சிறுநீரக பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் தான் அவர் இன்று தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bharathi kannama- updatenews360
  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…