ரோபோ சங்கரின் தற்போதைய நிலை.. நண்பர் வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Author: Vignesh
16 May 2023, 10:30 am

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது மனைவி பிரியங்காவும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிகர் ரோபோ ஷங்கர் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். அண்மையில் கூட அனுமதியின்றி அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து சர்ச்சையில் சிக்கினார்.

robo shankar-updatenews360

இந்நிலையில் ரோபோ சங்கரின் ஆளே அடையாளம் தெரியாத வகையில் படு ஒல்லியாக எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன இப்படி ஆகிவிட்டார் என ஷாக்கில் இருந்தனர்.

இதனிடையே, நடிகர் ரோபோ ஷங்கரின் நெருங்கிய நண்பரான போஸ் வெங்கட் அவரைப் பற்றி தெரிவித்த பேட்டியில், ரோபோ ஷங்கருக்கு உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதும், உடல் எடை குறைந்ததும் உண்மைதான்.

robo shankar-updatenews360

யாருக்கு வேண்டுமானாலும் உடல்நிலை சரியில்லாமல் போகலாம் என்றும், அவரது உடல்நிலை குறித்து நிறைய காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. விரைவில் ரோபோ ஷங்கர் பூரண குணமடைந்து பழையபடி நல்ல நிலைக்கு திரும்பி வருவார் என தெரிவித்து இருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அப்படி என்ன தான் ஆச்சி ரோபோ சங்கர் குடும்பத்திற்கு என்று ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

robo shankar-updatenews360

நல்ல அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ரோபோ சங்கர் சமீபகாலமாக உடல் எடை மிகவும் குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டநிலையில், அவருக்கு மஞ்சள் காமாலை வந்து கல்லீரல் பாதிக்கப்பட்டதே காரணம் என ஒரு தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

robo shankar-updatenews360

ரோபோ சங்கர் ஒரு அசைவ உணவுப்பிரியர் மற்றும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என அனைவருக்கும் தெரியும், இந்த பழக்கத்தினால் அவரின் கல்லீரல் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில், சோகம் என்னவெனில் ஆறு மாதமாக அவரின் உடலில் மஞ்சள் காமாலை இருந்துள்ளது அவருக்கே தெரியவில்லையாம், சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று வீடு திரும்பியவருக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரின் உடலை பரிசோதித்தபோதுதான் அவருக்கு மஞ்சள் காமாலை இந்தது குறித்த உண்மை அவரின் குடும்பத்தினருக்கே தெரியவந்துள்ளதாம்.

robo shankar-updatenews360

மேலும், மதுவினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான் அவரின் உடல் எடையும் குறைந்துள்ளதாம். இதில் நல்ல விஷயம் என்னவெனில் கடந்த ஆறு மாதங்களாக ரோபோ சங்கர் மது அருந்துவதை விட்டுள்ளார்.

robo shankar-updatenews360

அதுதான் அவரின் உயிரையும் தற்போது காப்பாற்றியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் மருத்துவரின் கண்காணிப்பில்தான் இருந்து வருகிறார். இப்போது ரோபோசங்கர் குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள ரோபோ சங்கர், வலைத்து வலைத்து நடனமாடியுள்ளார். அவரின் வீடியோவை நெருங்கிய நண்பரும் விஜய் டிவி புகழ் மதுரை முத்து பகிர்ந்து இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அடடே அருமை என லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து ஷாக்காகி வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 653

    1

    0