உடல் எடையை குறைப்பது ஒரு கடினமான செயலாகும். அப்படி இருக்க பிசிஓஎஸ் இருக்கும்பொழுது தாறுமாறாக அதிகரிக்கும் உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலான காரியம். நீங்களும் பிசிஓஎஸ் பிரச்சனையால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகிறீர்கள் என்றால், கவலைப்படாதீர்கள்… உங்களுக்கான ஒரு சில டிப்ஸ் இந்த பதிவில் காத்திருக்கிறது. பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கும் பொழுது ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க காலை நேரத்தில் ஒரு சில மாற்றங்களை செய்யலாம். வைட்டமின்கள் மினரல்கள் ஆன்டிஆக்சிடென்ட்கள் போன்ற அனைத்தும் நிறைந்த சமச்சீனான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.
உங்களது காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். காலையில் உணவு தயாரிக்க நேரமில்லாமல் போகும்பொழுது இரவிலேயே அதனை தயார் செய்துவிட்டு காலையில் சாப்பிடும் பழக்கத்தை நீங்கள் கடைப்பிடிக்கலாம். அந்த வகையில் ஓட்ஸ் மற்றும் பால் ஆகியவற்றை இரவு ஊற வைத்துவிட்டு காலையில் அதில் டிரை ஃப்ரூட்ஸ், பழங்கள், காய்கறிகள், விதைகள் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது அதை ஆரோக்கியமான ஒன்றாக மாற்றும்.
ஒரு பெரிய கிளாஸ் தயிர் அல்லது மோர் போன்றவற்றுடன் உங்கள் நாளை தொடங்குவது உங்களுக்கு போதுமான அளவு புரதத்தை கொடுக்க உதவும். மேலும் நீங்கள் சப்பாத்தி, இட்லி அல்லது தோசையுடன் சாம்பார், பருப்பு மற்றும் முட்டை போன்றவற்றை வைத்து சாப்பிடலாம்.
போதுமான அளவு ப்ரோபயோடிக்களை உங்கள் உணவில் கேட்பது ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஊக்குவிக்கும். இதற்கு தயிர், மோர், பால் மற்றும் புளிக்க வைக்கப்பட்ட காய்கறிகளை நீங்கள் சாப்பிடலாம்.
தினமும் போதுமான அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடல் எடையை விரைவில் குறைக்க உதவியாக இருக்கும். இதற்கு நீங்கள் விதைகள் மற்றும் நட்ஸ் போன்றவற்றை தேர்வு செய்து சாப்பிடலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.