வெல்ல ஆலை கொட்டகை மீது பெட்ரோல் குண்டுவீசி தீவைத்த சம்பவம் ; வடமாநில தொழிலாளி பலி.. நாமக்கல்லில் தொடரும் பதற்றம்..!

Author: Babu Lakshmanan
17 May 2023, 8:33 am

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைக்கு தீ வைத்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் தூங்கி கொண்டிருந்த 4 வட மாநில தொழிலாளர்களில், 3 வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

4 தொழிலாளர்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதி வாக்குமூலம் வாங்கிச் சென்றார். அதனை தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பார்த்து ஆறுதல் தெரிவித்துச் சென்றார். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஒடிசாவை சார்ந்த ராகேஷ் (வயது 19), சட்டீஸ்கர் மாநிலத்தை சார்ந்த சுகுராம் (வயது 28), எஸ்வந்த் (வயது 18), கோகுல் (வயது 23), ஆகிய நான்கு வடமாநில தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ காயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஒடிசாவை சார்ந்த ராகேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைகாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 430

    0

    0