அசத்தலான ஆரம்பம்… Finish-ங்கில் சொதப்பிய மும்பை ; ஒரே ஓவரில் ஹீரோவான மோஷின்கான்… லக்னோ அபாரம் ..!!

Author: Babu Lakshmanan
17 May 2023, 9:20 am

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ ஏக்னா ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. அதில் குயின்டன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரையடுத்து, களமிறங்கிய க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஆனால், அரைசதம் எட்டவிருந்த பாண்டியா 49 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். ஸ்டோனிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இறுதிவரை நிற்க இன்னிங்ஸ் முடிந்தது.

முடிவில், லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 89* ரன்களும், க்ருனால் பாண்டியா 49 ரன்களும் குவித்துள்ளனர். மும்பை அணியில் ஜேசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் இஷான் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா (37), இஷான் கிஷான் 59) என சிறப்பான பங்களிப்பை கொடுத்து ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, வந்த சூர்யகுமார் யாதவ் (7), வதேரா (16), விஷ்ணு வினோத் (2) என ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் கடைசி இரு ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நவீன் உல் ஹக் வீசிய 19வது ஓவரில் டிம் டேவிட் 2 சிக்சர்களுடன் சேர்த்து 19 ரன்களை குவித்தார். இதனால், மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால், அந்த ஓவரை வீசிய மோசின் கான், வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வெற்றி பெறச் செய்தார். பெரிய அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் மற்றும் க்ரீன் களத்தில் இருந்தும் மும்பை அணியால் வெற்றி பெற முடியாமல் போனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 15 புள்ளிகளுடன் லக்னோ அணி 3வது இடத்திற்கு முன்னேறியது.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 515

    0

    0