தங்கலான் படத்திற்கு தாறுமாறா பயிற்சி எடுக்கும் மாளவிகா – தீயாய் பரவும் வீடியோ!

Author: Shree
17 May 2023, 11:27 am

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷ நடிகரான விக்ரம் பல வித்யாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிரள வைப்பார். அப்படிதான் தற்போது ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்தில் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார்.

thangalaan vikram -updatenews360

பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. தங்கலான் என்றால் ஊர் காவலன் என்று அர்த்தம். இரவு நேரங்களில் அந்த ஊரை சுற்றிவந்து அங்குள்ள மக்களின் பாதுகாவலனாக இருப்பதும், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக ஊர் தலைவருக்கு தகவலை சொல்வதே அவர்கள் வேலை.

malavika mohanan

தமிழ் பேசும் பறையர் இனங்களில் ‘தங்கலால பறையன்’ என்று ஒரு இனம் இருந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் இனத்தவர்களின் தலைவன், ஊர்க்காவலன், மக்கள் பாதுகாவலன், எல்லை வீரனாக இருப்பவர்களை தான் தங்கலான் என்று அழைத்துள்ளனர். இதில் விக்ரம் தங்கலானாக நடித்திருக்கிறார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் மாளவிகா மோகனன் இப்படத்திற்காக சிலம்பம் பயிற்சி எடுத்து வரும் வீடியோவை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

https://www.instagram.com/reel/CsTmGOyPCTD/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 633

    0

    1