அழகை அதிகரிக்க போடப்பட்ட ஹார்மோன் ஊசி?.. டேட்டூ கூட குத்தமுடியாது ஹன்சிகா ஓப்பன் டாக்..!
Author: Vignesh17 May 2023, 11:30 am
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர், விஜய், தனுஷ், சூர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சமீப காலமாக படவாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான சோஹைல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெய்பூரில் உள்ள பழமையான அரண்மனையில் இவர்கள் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த கையோடு மும்பையில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்று குடியேறி உள்ளார் ஹன்சிகா. அங்கு நடிகை என்பதை மறந்து குடும்ப வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தன்னை பற்றி வெளியான தகவல் குறித்து முதல்முறையாக மவுனம் களைத்து பதிலளித்துள்ளார். அதாவது, ஹன்சிகா தனது அழகை அதிகரிக்க ஹார்மோன் ஊசி போட்டுக் கொண்டதாக வெளியான தகவலுக்கு அவர் பதில் கூறியதாவது :- நான் 8 வயதில் நடிகையானேன். நான் வேகமாக வளர அம்மா ஊசி போட்டதாக மிக அநாகரிகமாக விளம்பரம் செய்யப்பட்டது. இதை எப்படி உண்மை என்று நம்புவது என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, ஹன்சிகாவின் அம்மா மோனா கூறுகையில், “உண்மையாகவே ஹன்சிகாவை நான் ஊசி போட்டு வளர்த்திருந்தால் டாடா பிர்லாவை விட பணக்காரராக ஆகியிருப்பார். இப்படி பொய் பிரச்சாரம் பண்ண பொது புத்தியாவது இருக்கணும்,” என கோபமாக தெரிவித்தார்.
ஹன்சிகா, தங்களின் திருமண வீடியோவில் பல விசயங்களை ஓப்பனாக கூறியிருக்கிறார்.மேலும் அதில், இன்றுவரையில் தன்னால் ஊசியே போட்டுக்கொள்ள முடியாது என்றும், ஏன் உடலில் டேட்டூவை கூட தன்னால் போட்டுக்கொள்ள முடியாது எனவும், அதற்கு காரணம் ஊசி என்றால் தனக்கு அவ்வளவு பயம் என்றும் ஒரு தாய் ஏன் இப்படிப்பட்ட விசயத்தை செய்யவேண்டும் எனவும், இதுபோன்ற செய்திகளை பரப்புவதால் மக்கள் தங்களை பார்த்து பொறாமைப்படுவதாகவே நினைக்கிறேன் என்றும் ஹன்சிகா வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.