வாய்க்கு வந்தபடி தனுஷை திட்டிய வடிவேலு… இன்று வரை நீடிக்கும் பகை – உண்மையை உடைத்த பிரபலம்!
Author: Shree17 May 2023, 7:04 pm
தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.
அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் தனுஷின் படிக்காதவன் படத்தில் விவேக்கிற்கு முன்னதாக வடிவேலு தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தாராம். ஆனால் வடிவேலு செட்டில் தனுஷை மரியாதையின்றி மிகவும் இழிவாக பேசி திட்டினாராம். இதனால் அவரை மாற்றச்சொல்லி அந்த ரோலில் பின்னர் விவேக் நடித்தாராம். விவேக் நடித்த காமெடி காட்சிகள் சூப்பர் ஹிட் அடித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அப்படத்தின் இயக்குனர் சுராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.