செல்போன் கடைக்குள் புகுந்த சாரை பாம்பு : கடை ஊழியரின் கால் அருகே வந்த பரபரப்பு ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2023, 9:16 pm

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு ஒன்று கடையில் அமர்ந்திருந்தவரின் கைக்கு இடையில் சென்று கால் அருகே நகரும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை, தேனீர் கடை போன்ற கடைகள் உள்ளன.இந்த நிலையில் இன்று மாலை செல்போன் கடைக்குள் புகுந்த சுமார் 5 அடி சாரைப்பாம்பு செல்போன் ரேக் வழியாக நகர்ந்து, கடையில் அமர்ந்திருந்த பணியாளரின் கைக்கு இடையில் சென்று கால் அருகே நெளிந்துள்ளது.

அப்போது சுதாரித்துக் கொண்ட பணியாளர் பாம்பை பார்த்ததும் அதிர்ச்சியில் ஓடினார். இதையடுத்து அந்த பாம்பு செல்போன் கடைக்குள் இருந்த ஓட்டை வழியாக வெளியே சென்றது.

இந்த நிலையில் செல்போன் கடை ரேக் வழியாக பாம்பு நகர்ந்து செல்வதும், கடையின் ஊழியர் அதிர்ச்சியில் ஓடுவதும் போன்ற பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?