பட்டியலின மக்களுக்கு ஆதரவாக பேசிய அமைச்சருக்கு எதிர்ப்பு : ஒரு சமூகத்தினர் போராட்டம்.. தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2023, 4:30 pm

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் உள்ள இந்த கோயிலில் பல ஆண்டுகளாக பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத சூழல் இருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் கோயில் திருவிழாவின் போது இளைஞர் சிலர் கோயிலுக்கு சென்றதால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் பட்டியலின மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும். மேலும் பட்டியலின மக்கள் கோயிலுக்கு அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனகூறி நேற்று 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி அனைவரும் சமம் என்றும் , பட்டியலின மக்கள் கோயிலுக்கு செல்வதை தடுப்பவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுப்படும். என கூறினார்.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தற்போது மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் முன்பாக ஒரு தரப்பினர் பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கோயில் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடன் விழுப்புரம் வருவாய் கோட்டாச்சியர் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்த போது திடீர் என மூவர் உடலின் மண்ணென்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக காவல்துறையினர் தடுத்து அவர்களை மீட்டு சென்றனர். தொடர்ந்து மேல்பாதி கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவுவதால் ஏறாலமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 480

    0

    0