சமந்தா சாபம் சும்மா விடுமா.. அண்ணன் தம்பிக்கு ஒரே நேரத்தில் வந்த ஆப்பு : சோகத்தில் நாகர்ஜூன்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2023, 4:47 pm

அகில் அக்கினேனி தெலுங்கு திரைத்துறையில் பிரபலங்களான நாகார்ஜுனா மற்றும் அமலாவின் மகன் ஆவார். இவர் முதன் முதலில் 2014ம் ஆண்டு வெளிவந்த “மனம்” எனும் தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

இதன்பின் பின் 2015ம் ஆண்டு வெளிவந்த “அகில்” எனும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். அது பாக்ஸ் ஆபீஸில் தோல்வி அடைந்தது. அப்படத்தை தொடர்ந்து இரண்டு வருடம் கழித்து “ஹலோ” எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் டீசண்ட் ஹிட் ஆனது.

கடந்த ஏப்ரல் 29, 2023 அன்று “ஏஜென்ட்” திரைப்படம் வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்பில் பல கோடி செலவில் திரைக்கு வந்த இப்படம் மோசமான வரவேற்பை பெற்றது. படத்தின் தயாரிப்பாளர் அனில் சுங்கரா படத்தின் வணிகரீதியான தோல்வியினை தெரிவித்துள்ளார்.

இதே போல அண்மையில் அகிலின் அண்ணனும், நாகர்ஜூனாவின் மூத்த மகனுமான நாகசைதன்யாவின் கஸ்டடி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கியிருந்தாலும், இது அவருடைய படமா என சந்தேகத்தை எழுப்பும் வகையில் உள்ளது. சினிமாவில் தன்னைப் போல இருவரும் ஜொலிப்பார்கள் என நினைத்த நாகர்ஜுனாவுக்கு சோதனையாகவே அமைந்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 3635

    29

    15