அழகுநிலையம் என்ற பெயரில் அந்தரங்க வேலை.. விபச்சாரம் செய்து வந்த புரோக்கர்களை தட்டி தூக்கிய போலீசார் ; 2 பெண்கள் மீட்பு..!!
Author: Babu Lakshmanan19 May 2023, 1:54 pm
திருச்சியில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்களை கைது செய்த போலீசார், 2 பெண்கள் மீட்டனர்.
திருச்சியில் புத்தூர் ஈ.வி.ஆர் சாலையில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு கவால் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். அப்பொழுது விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களை காவல்துறையினர் மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து கருமண்டபம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ராஜ்பாபு (27) மற்றும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் அஜித்குமார் (27) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் விபச்சாரத்தில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு பெண்களும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.