கூட்டணியை உதாசீனப்படுத்துகிறாரா மம்தா? பதவியேற்பு விழா புறக்கணிப்பால் காங்கிரஸ் அப்செட்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2023, 2:25 pm

கூட்டணியை உதாசீனப்படுத்துகிறாரா மம்தா? பதவியேற்பு விழா புறக்கணிப்பால் காங்கிரஸ் அப்செட்!!

கர்நாடக முதலமைசசராக சித்தராமையாஇ துணை முதலமைச்சராக டிகே சிவக்குமார் நாளை பதவியேற்க உள்ளனர்.

இதற்காக அரசியல் கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விமுத்தது. இந்த நிலையில் சித்தராமையா பதவியேற்கும் விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா சார்பாக திரிணாமுல் காங்கிரஸ் மக்களை குழு துணை தலைவர் ககோலிகோஷ் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அத்துடன் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், இமாசல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர்சிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மராட்டிய முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Aamir Khan salary model 20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!