அரசாங்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம் : அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2023, 8:21 pm

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைவருக்கும் இ சேவை என்ற திட்டத்தின் கீழ் படித்த 13,336 இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு இ-சேவை பயணம் குறியீடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறைகளுக்கான அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று வழங்கினார்.

தமிழ்நாடு தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு; அனைவருக்கும் இ- சேவை என்ற திட்டம் துவங்க நிகழ்ச்சி திருப்புமுனையாக உள்ளது. இந்த திட்டத்தை தீட்டிய அமைச்சர் மனோதங்கராஜ்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இதுபோன்ற திட்டங்களை உருவாக்குவதற்கு மக்கள் நலன் கொண்ட அரசால் மட்டும்தான். 13,336 புதிதாக 7695 கிராமபுற பகுதியில் இருந்தும் 5000க்கும் மேற்பட்ட பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொத்தடிமையில் இருந்து விடுபட்டு நபருக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் வழங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த திட்டம் வாயிலாக 89 இருந்து 93 சதவீதமாக இணைய சேவை உயருகிறது. தமிழ்நாட்டில் 5 கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு இ- சேவை மையமும் கிராமங்களிலும், 2 கிலோமீட்டருக்கு இடைவெளியில் ஒரு இ- சேவை மையமும் நகர்ப்புறங்களில் அமைக்க பட்டுள்ளது.

இந்த விரிவாக்க திட்டம் கையடக்க ஆண்ட்ராய்டு போன்களில் செயலி மூலம் வழங்கி இருப்பது என்பது ஆரம்பமே, தொடர்ந்து இதன் சேவைகள் பன்மடங்கு வளர்ச்சி அடையும். கொள்கையும் தத்துவமும் மாறக்கூடாது.

சட்டமன்றத்தில் பலமுறை , கூடுதல் அரசு அலுவலகம், தாளுக்கா அலுவலகம் கட்டிதர வேண்டும் என்று கேட்டுள்ளார்கள், மாறாக மக்களை தேடி சேவைகள் சென்று செல்லவேண்டும் என்பது தான்.

16 வது சட்டபேரவை கூட்டத்தின் போது பயன்படுத்திய புதிதாக வாங்கப்பட்ட 234 கணினி தற்போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தில் இசேவை பயன்பாட்டிற்கு வழங்கபட்டுள்ளது.

எங்களின் நோக்கம் அரசாங்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் எங்கள் தொலைநோக்கு முயற்சி என்று பேசினார்.

  • Tamannaah marriage rumors கல்யாணத்தை குறிவைக்கும் தமன்னா.. 35 வயதில் எடுத்த திடீர் முடிவு..!
  • Views: - 410

    0

    0