கர்நாடகாவில் புதிய அரசு இன்று பதவியேற்பு ; அமைச்சராகிறார் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே..!!

Author: Babu Lakshmanan
20 May 2023, 8:43 am

கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவி ஏற்க உள்ள நிலையில், அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. வெற்றி பெற்ற பிறகும், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது.

இருவரையும் டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவகுமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, இருவரும் இன்று பதவியேற்க உள்ளனர். அவர்களோடு, 8 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.

இதனிடையே, புதிதாக பதவியேற்க உள்ள 8 அமைச்சர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்க்கிஹோலி உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங் கார்கேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் இன்று பதவியேற்க உள்ளர்.

இன்று மதியம் 12.30 மணியளவில் நடக்கும் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-மந்திரிகள் நிதிஷ்குமார்(பீகார்), அசோக் கெலாட்(ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல் (சத்தீஸ்கர்), சுக்விந்தர்சிங் சுகு (இமாசல பிரதேசம்), ஹேமந்த் சோரன்(ஜார்கண்ட்), பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 510

    0

    0