மேட்ரிமோனியால் பழக்கம்… இளம் பெண்ணுடன் அடிக்கடி உல்லாசம்.. திருமணத்திற்கு நிபந்தனை போட்ட பேராசிரியர் கைது..!!

Author: Babu Lakshmanan
20 May 2023, 1:05 pm

திருச்சி அருகே இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், அய்யன் கோட்டையை சேர்ந்தவர் சுப்புராமன். இவரது மகள் சாந்தி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எம்.இ பட்டதாரியான இவருக்கு மேட்ரிமோனியில் வரன் பார்த்து உள்ளனர். அதேபோல் திருவெறும்பூர் வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரமேஷ் (38) இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் ராமநாதபுரம் கிளையில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் ரமேஷும் மேட்ரிமோனியில் மூலம் பார்த்துள்ளார். அப்படி வரன் பார்க்கும் பொழுது இருவருக்கும் இடையே அறிமுகமாகியுள்ளது. அப்போழுது சாந்தி மத்திய அரசு பணியில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார்.

இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து 6 மாதம் பழகியதாக கூறப்படுகிறது. அப்போது, சென்னை எக்மோர் பகுதியில் அறை எடுத்து தங்கி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.இந்த நிலையில் சாந்தி மத்திய அரசு பணியில் இல்லை, சாந்தி கூறியது பொய் என ரமேஷுக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சாந்தி ரமேஷை திருமணம் செய்து கொள்ள கேட்ட போது, ரமேஷ் அதற்கு மறுத்ததோடு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், 100 பவுன் நகை, கார் வேண்டும் என கூறி, அதோடு இல்லையென்றால் தன்னை திருமணம் செய்து கொள்ள உனக்கு தகுதி இல்லை, எனக் கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சாந்தியும் ரமேஷும் சென்னை எக்மோர் பகுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்ததால் இச்சம்பவம் குறித்து சாந்தி சென்னை எக்மோர் காவல் நிலையத்தில் ரமேஷ் மீது இரண்டு முறை புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரமேஷின் நண்பர் ரமேஷிடம் எதற்காக இருவரும் வழக்கு போட்டு கொள்கிறீர்கள், சமரசம் பேசி வழக்கை முடித்துக் கொள்ள வேண்டியதுதானே எனக்கு கூறி சமரசம் பேசுவதற்காக கடந்த 13ம் தேதி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உள்ள ரமேஷ் வீட்டிற்கு வரவழைத்ததாகவும், அதன் அடிப்படையில் சாந்தியும் வந்ததாகவும். அப்பொழுது சமரசம் பேசும் பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சாந்தியை ரமேஷ் தாக்கியதோடு, என்னை திருமணம் செய்து கொள்ள உனக்கு தகுதி இல்லை, வேண்டும் என்றால், வப்பாட்டியாக இரு என கூறி ரமேஷ் கொலை மிரட்டல் விடுத்ததாக சாந்தி திருச்சி எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருச்சி எஸ்பி அலுவலகத்தில் இருந்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி திருவெறும்பூர் போலீசருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததோடு, ரமேஷை கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 440

    0

    0