‘ரூ.2 லட்ச ரூபாய் எடு.. இல்லைனா குண்டு வெடிச்சிரும்’ : வங்கிக்குள் வெடிகுண்டுடன் வந்த நபர்.. ஷாக் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2023, 2:19 pm

வங்கிக்குள் புகுந்து இரண்டு லட்ச ரூபாய் கொடுக்க தவறினால் வெடிக்க செய்து விடுவேன் என மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டத்தில் உள்ள ஜி டி மெட்லா நகரில் ஆதர்ஷ் வங்கி என்ற பெயரிலான கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று அந்த வங்கி வழக்கம்போல் செயல்பட்டு கொண்டிருந்தது.

மதியத்திற்கு மேல் வங்கியில் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் ஆகியோர் இருந்தனர். அப்போது அந்த வங்கிக்குள் நேற்று மதியத்திற்கு மேல் புகுந்த நபர் ஒருவர் சினிமாவில் காண்பிக்கப்படுவது போன்ற போலி வெடிகுண்டு ஒன்றை காண்பித்து எனக்கு உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் பணம் தேவை. கொடுக்க தவறினால் வெடிக்க செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் பெயர் சிவாஜி என்பதும் ஜீடிமெட்டிலா பகுதியை சேர்ந்த அவர் பல்வேறு நிறுவனங்களில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து தற்போது பார்வை கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது.

எனவே சுலபமாக பணம் சம்பாதிக்க முடிவு செய்து வாங்கியில் புகுந்து மிரட்டியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை கைது செய்துள்ள போலீசார் அவரை விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Baby John box office performanceசும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அட்லீ…வசூலில் திணறும் பேபி ஜான்…!
  • Views: - 441

    0

    0