இனிமேல் உனக்கு கேடுகாலம் தான்…. சூர்யாவை பழி வாங்க படமெடுக்கும் பாலா!
Author: Shree20 May 2023, 5:15 pm
உலக தமிழர்களின் பேவரைட் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் அப்பா சிவகுமார் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தாலும் அவரது தனித்துவமான நடிப்பும் ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 1997ம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.
அதன் பின்னர் நந்தா, காக்க காக்க, பிதாமகன் , பேரழகன் , வேல் , வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, ஆறு, கஜினி அயன் , சில்லுனு ஒரு காதல், ஆதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சூர்யா காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகை ஜோதிகாவை காதலித்து பின்னர் 8 ஆண்டுகள் பெற்றோர்கள் சம்மதத்திற்காக காத்திருந்து திருமணம் செய்துக்கொண்டதாக கேள்விப்பட்டிருப்போம்.
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யாவின் ஆரம்ப காலகட்டத்தில் அவரின் அபார வளர்ச்சிக்கு முக்கிய புள்ளியாக இருந்தவர் இயக்குனர் பாலா தான். ஆம், பாலா பெரிய நடிகர் என்ற அடையாளம் இன்றி திறமைக்கு சரியான கதையும் கிடைக்காமல் இருந்து வந்த நேரத்தில் தான் பாலா சூர்யாவை நம்பி நந்தா படத்தை இயக்கினார். அந்த படம் பாலாவின் சாயலில் எடுக்கப்பட்டு சூர்யாவின் திறமைகளை மெருகேற்று மக்களுக்கு நல்ல நடிகராக சூர்யாவை காட்டினார்.
நந்தா திரைப்படம் சூர்யாவின் கெரியரின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக அமைந்தது. அதன் பின் மீண்டும் பிதாமகன் படத்தில் சூர்யாவுக்கு வாய்ப்பு கொடுத்து மேலும் பிரபலமாக்கினார். சூர்யாவை மட்டுமல்லாது அவரது மனைவி ஜோதிகாவுக்கு நாச்சியார் ஹிட் படத்தை இயக்கி ரீஎன்ட்ரியில் ஹிட் கொடுக்க செய்தார். சூர்யாவின் வளர்ச்சிக்கு இவ்வளவு உதவிய பாலா சூர்யவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் தயாரித்து நடித்து வந்தார். ஆனால், அவரை கொடுமை படுத்தி டார்ச்சர் செய்து… அதிகம் பணம் பிடிங்கி செலவழித்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் படமே வேண்டாம் என கூறிவிட்டு சூர்யா விலகிக்கொண்டார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து சூர்யா நடிக்க இருந்த ரோலில் தற்போது அருண் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரையும் வச்சி பண்ணக்கூடாத டார்ச்சர்களையெல்லாம் செய்து கொடுமை படுத்தி வருகிறராம் பாலா. இருந்தாலும் அருண் விஜய் , பரதேசி அதர்வா, அவன் இவன் விஷால், ஆர்யா, இவர்களை போல் பேசப்படவேண்டும் என எல்லாத்தையும் தாங்கிக்கொண்டு நடித்து வருகிறாராம்.
அப்படத்தில் முதலில் சூர்யாவுக்கு ஜோடியாக கமிட் ஆகியிருந்த இளம் நடிகை கீர்த்தி ஷெட்டியை பாலா தன்னுடன் நெருக்கமாக இருக்க சொல்லி மிகவும் டார்ச்சர் செய்து வந்துள்ளார். படப்பிடிப்பின் போது தன் அறைக்கு அருகிலேயே கீர்த்தி ஷெட்டிக்கு ரூம் கொடுத்து அவ்வப்போது கதை சம்மந்தமாக ஆலோசனை செய்யவேண்டும் என கூறி கதவை தட்டுவராம். ஆனால், ஹீரோ சூர்யாவுக்கு பல மையில் தூரம் ரூம் போட்டுக்கொடுத்துள்ளார். அவரின் அட்டூழியத்தையெல்லாம் பார்த்து சூர்யா விலகிக்கொண்டார்.
சூர்யா விலகிய உடனே நடிகை கீர்த்தி ஷெட்டியும் விலக்கொண்டாராம். பின்னர் மீனும் மீண்டும் ஹீரோயினுக்கு மட்டும் போன் போட்டு அதிகமாக சம்பளம் தருகிறேன் நடிக்க வாங்க என கேட்டு தொந்தரவு செய்து வருகிறாராம் பாலா. எவ்வளவு கொடுத்தாலும் வேண்டவே வேண்டாம் என்று எஸ்கேப் ஆகிவிட்டராம் கீர்த்தி ஷெட்டி.
இதெல்லாம் சூர்யாவால் தான் என அவர் மீது கடுங்கோபத்தில் இருந்து வரும் பாலா சூர்யாவை பழிவாங்க வணங்கான் படத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் சூர்யாவுக்காக எழுதிய கதையை அப்படியே அருண்விஜய்யை வைத்து செதுக்கி வருகிறாராம். மேலும், வேக வேகமாக ஷூட்டிங் முடித்து திட்டமிட்ட நாளிலே டிசம்பரில் வெளியிட மும்முரமாக செயல்பட்டு வருகிறாராம். ஒரு வேலை பாலா எதிர்பார்ப்பது போன்றே வணங்கான் சூப்பர் ஹிட் அடித்துவிட்டால் அவர் நிச்சயம் ஜென்மத்திற்கும் சூர்யாவை வைத்து இனி படமே எடுக்கமாட்டார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.