திமுக நோட்டை மாத்திரும்… ட்ராக் பண்ணுங்க : நிர்மலா சீதாராமனுக்கு அலர்ட் கொடுக்கும் அண்ணாமலை!
Author: Udayachandran RadhaKrishnan20 May 2023, 9:14 pm
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. வங்கிகள் ரூ.2000 நோட்டுகள் விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ள ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லும் எனக் கூறியுள்ளது.
மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி கிளைகளில் ரூபாய் 2000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளிடையே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அண்ணாமலை எழுதி உள்ள கடிதத்தில், “நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான தொடர் முயற்சியாக ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செப்டம்பர் 30ஆம் தேதி வரை அரசு திரும்பப் பெறும் எனத் தெரிவித்துள்ளது. இதனை நாடு முழுவதும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏனெனில் சாமானிய மக்களின் நலனுக்காக இது.
திமுக அரசியல்வாதிகள் பணமோசடிக்கான புதிய வழிகளை கண்டுபிடிப்பதில் பெயர் பெற்றவர்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகனும் ஓராண்டில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர் என்பதை தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் திமுக அரசியல்வாதிகள் கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் முறைகேடாக சம்பாதித்த ரூ.2,000-ஐ மாற்றுவார்கள். எனவே இதனை நிதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.