அஜித்தை அடுத்து மாஸ் ஹீரோவுடன் களமிறங்கும் மகிழ் திருமேனி… யார் தெரியுமா?
Author: Shree20 May 2023, 9:35 pm
அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படமான விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
ஏற்கனவே மகழ் திருமேனி தடையறத் தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். மேலும் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப்பிற்கு டப்பிங் பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
அதாவது அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்குவதற்கு முன்னரே நடிகர் சிம்புவை வைத்து வேறு படம் இயக்க இருந்தாராம் மகிழ் திருமேனி. இந்த படத்தை AGS தயாரிக்க இருந்தார்களாம். இப்படத்தை குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போது தான் மகிழ் திருமேனிக்கு அஜித்தின் 62 வது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே அஜித் படத்தை முடித்த பின்னர் சிம்புவை வைத்து திட்டமிட்டபடியே மாசான படமொன்றை இயக்கப்போகிறாராம். எனவே மகிழ் திருமேனி அடுத்தடுத்த ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் ஆக உள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.