சாலையில் சென்ற வாகன ஓட்டி மீது மரக்கிளை ஒடிந்து விழுந்து விபத்து.. சிறுவன் படுகாயம் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan20 May 2023, 9:46 pm
கோவை ஆர் எஸ் புரம் டிவி சாமி சாலையில் நான் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. கடைகள் நிறைந்த இப்பகுதியில் சாலை ஓரங்களில் மரங்கள் நீண்ட உயரத்துக்கு வாழ்ந்துள்ளன.
இந்நிலையில் இன்று மதியம் ஸ்டைல் யூனியன் கடையின் முன்பு இருந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதில் அந்த சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணம் செய்த ஐந்து வயது சிறுவனின் தலையில் மரத்தின் கிளை விழுந்தது.
இதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனடையே மரத்தின் கிளை சாலையில் முறிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
அதில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் மீது மரத்தின் கிளை விழுவதும், மற்றொருபுறம் சாலையோரம் இருசக்கர வாகனத்தை பார்க் செய்ய அந்த நபர் மரததின் கிளை முறிந்து விழுவதை பார்த்து பதறி ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவத்தில் எங்க இருக்க ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்துக்கு தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தின் காரணமாக டிவி சாமி சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.