பிரபல திரையரங்கை விலைக்கு வாங்கிய நயன்தாரா… பிசினஸில் புரளும் கோடிகள்!

Author: Shree
20 May 2023, 10:14 pm

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.

பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.

அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா தற்போது ஒரு படத்திற்கு சுமார் 5 முதல் 10 கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் பெறுகிறார்.

நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு The lip balm company ஒன்றை நடத்தி வருகிறார். தனக்கென தனி ஜெட் விமானம் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் கணவருடன் அவ்வப்போது கொச்சி, ஹைதராபாத், மும்பை என ட்ரிப் அடிப்பார். அது தவிர அவரிடம் BMW 5s, Mercedes GLS 350 D, BMW 7 series, Toyota Innova Crysta என கார்களின் மதிப்பு மட்டும் ரூ. 5 கோடி. இது தவிர சென்னையில் பங்களா, தனி வீடு, கேரளா , ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் கார் பார்க்கிங் உடன் கூடிய வசதியான வீடுகள் உள்ளது.

இப்படி பெரிய தொழிலதிபர்களுக்கு இணையாக லக்ஸரி வாழ்க்கை வாழ்ந்து வரும் நயன்தாரா தற்போது சென்னையில் பிரபல தியேட்டரில் ஒன்றாக இருந்து மூடப்பட்ட அகஸ்தியா திரையரங்கை சொந்தமாக விலைக்கு வங்கியிருக்கிறாராம். விரைவில் அந்த திரையரங்கு வளாகத்தில் மேலும் புதிதாக இரண்டு தியேட்டர்களை கட்டவும் முடிவெடுத்திருக்கிறாராம். அடுத்த ஆண்டு இந்த தியேட்டர் திறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1066

    3

    3