முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க அண்ணாமலை முடிவு : தமிழக அரசியலில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2023, 11:23 am

திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே தோடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. திமுக அரசின் செயல்பாடுகளை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினரும் அண்ணாமலையை விமர்சித்து வருகின்றனர். நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கும் தொடரப்பட்டதுள்ளது, இந்தநிலையில் தமிழகத்தில் கள்ள சாராயாம் சாப்பிட்டு 22பேர் பலியாகியுள்ளனர்.

இதன் காரணமாக திமுக அரசின் சட்டம் ஒழுங்கு செயல்பாட்டை விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் மது போதைக்கு தமிழகத்தில் 9% மக்கள் அடிமையாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, மது இல்லாத இந்தியா என்பது சாத்தியமே இல்லை, ஏனென்றால் இது ஜனநாயக நாடு ஆகவே தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.

ஐந்தாயிரத்திற்கும் அதிகமான உள்ள டாஸ்மாக் கடைகளை ஆயிரத்திற்கும் கீழாக கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். 2020 ல் மதுபானத்திற்கு அடிமையானவன் எண்ணிக்கை 5% ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதனுடைய பாதிப்பு சமூக பாதிப்பாக மாறிவிடும். கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் மதுபான கடையின் மூலம் வருமானம் என்பது 22 விழுக்காடு உயர்ந்துள்ளது. டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்தும்,

அதனால் வரக்கூடிய வருவாய் பற்றாக்குறையை எப்படி ஈடு செய்வது என்பது குறித்தும் வெள்ளை அறிக்கையை பாஜக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வழங்க உள்ளோம்.

44000 கோடி அரசுக்கு நஷ்டம் இல்லாமல் டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்து இந்த அறிக்கையில் தகவல்கள் நிச்சயம் இடம் பெறும் என தெரிவித்தார். மேலும் தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஆட்சி இல்லாத ஒரு கட்சி வெள்ளை அறிக்கையை கொடுக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 480

    0

    0