அமைச்சர் PTR-ன் அஸ்திவாரத்தை வேரோடு பிடுங்குகிறாரா ஸ்டாலின்..? திமுகவின் நடவடிக்கையால் அதிர்ந்து போன ஆதரவாளர்கள்..!!

Author: Babu Lakshmanan
22 May 2023, 12:38 pm

திமுக பெண் மாமன்ற உறுப்பினரை சமூக ரீதியாக அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், அமைச்சர் பிடிஆரின் ஆதரவாளரான முன்னாள் துணை மேயரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி மண்டலம் மூன்றில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி மண்டல கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த மண்டலத்துக்குட்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மதுரை ஹாஜிமார் தெரு 54 வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நூர்ஜஹான் கலந்து கொண்டு, தனது வார்டில் உள்ள கழிவு நீர், குடிநீர் பிரச்சனை குறித்து மண்டல தலைவர் பாண்டிசெல்வியிடம் கேட்டுள்ளார்.

அப்போது, அதிகாரிகள் முன்னிலையில் நூர்ஜஹானை மண்டல தலைவரின் கணவரும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளருமான மிசா பாண்டியன், சமூக ரீதியாக தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

பின்னர், திமுக கவுன்சிலர் நூர்ஜஹான் மிசா பாண்டியன் மதுரை மாநகராட்சியே கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அந்த அதிகாரத்தில் தன்னை மிரட்டியதாகவும், திமுக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, மிசா பாண்டியனின் மனைவி பாண்டிச்செல்வியும், நூர்ஜஹான் தவறான புகார் அளிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டை வைத்தார். இவ்வாறு மாறி மாறி குற்றச்சாட்டு வைத்த நிலையில் நூர்ஜஹானுக்கு ஆதரவாகவும், பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த மிசா பாண்டியன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ச்சியாக நோட்டீசிஸ் ஒட்டப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜனின் தீவிர ஆதரவாளரும், மத்திய மண்டலத்தலைவர் பாண்டிசெல்வியின் கணவரும், முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியனை தற்காலிகமாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிடிஆரின் அமைச்சர் இலாகா மாற்றப்பட்ட நிலையில், மதுரையில் மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டது. இதனையடுத்து, தற்போது அவரது ஆதரவாளரான மிசா பாண்டியன் மீதும் திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

PTR - Updatenews360

திமுகவில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளரான மேயர் இந்திராணி பொன்வசந்தின் பதவி நீடிக்குமா..? என்ற சந்தேகத்தையும் முன்வைக்கின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 508

    0

    0