மோசமான சாதனைக்காக அடித்துக்கொள்ளும் மும்பை – பெங்களூரு : ரோகித்தை முந்திய தினேஷ் கார்த்திக்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2023, 2:33 pm

நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 போட்டியின் போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

இதன் மூலம் ஐபிஎல்லில் அதிக டக் அவுட்கள் என்ற ரோஹித் சர்மாவின் மோசமான சாதனையை முறியடித்தார். நேற்று பெங்களூரு அணி பேட்டிங் செய்யும்போது குஜராத் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் பந்து வீசியபோது, ஐபிஎல்லில் அவரது 17வது டக் அவுட்டாக கார்த்திக் கோல்டன் டக் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மேலும், இதற்கு முன்னதாக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 16 டக் ஆகி மோசமான சாதனையை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்துள்ளார்.

அடுத்ததாக சுனில் நரைன் (15), மந்தீப் சிங் (15), ஆகியோரும் இந்த மோசமான சாதனை பட்டியலில் உள்ளனர். மேலும், ஐபிஎல் 2023 சீசன் 12 இன்னிங்ஸ்களில் மூன்று டக்குகளுடன் வெறும் 140 ரன்களை எடுத்த கார்த்திக்கிற்கு இந்த சீசன் ஐபிஎல் போட்டி மோசமாக அமைந்துள்ளது.

மேலும், நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான இந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • producer lose his money because of suriya film எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?
  • Close menu