அந்த இயக்குனர் என்ன கூப்பிட்டு வச்சு ஏமாத்திட்டார்- நடிகர் விஜய் சேதுபதி ஓபன் டாக்..!
Author: Vignesh22 May 2023, 4:45 pm
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக விடுதலை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து உள்ள இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார்.
கதையின் நாயகனாக சூரி நடித்து இருக்கிறார். வாத்தியாராக விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். இவர்களுடன் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். உலகம் முழுவதும் வெளியான ‘விடுதலை-1’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது.
இப்படம் ‘ஏ’ தணிக்கை சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும், திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சூரி வழக்கமான தனது பாணியில் இருந்து முற்றிலும் விலகி, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.
விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது சூர்யா, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதனிடையே, சூர்யா ஏற்கனவே தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த சிந்துபாத் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், சிந்துபாத் படத்தில் பார்த்த சூர்யாவை போல் இல்லாமல் விடுதலை படத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விடுதலை படத்திற்க்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு ஷூட்டிங் 8 நாட்கள் என தெவித்து அழைத்துச் சென்று, 8 நாட்களும் அவரை வைத்து ஆடிஷன் மட்டும் செய்ததாகவும், அதன் பின்னர் தான் படப்பிடிப்பு தொடங்கியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் திரைக்கு வந்த “வடசென்னை” படத்தில் நடிக்க வாய்ப்பு தவர விட்டதனால் மிகவும் வருத்தம் அடைந்தாகவும், அதனால் அவரின் “விடுதலை” படத்தில் நடிக்க ஆசை பட்டதாகவும், அவருடன் வேலை செய்த அனுபவம் மிகவும் அறிவு சார்ந்ததாக இருந்தது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.