‘வேறு ஏதுவும் வேணாம்’.. வளர்த்த காளையை சீதனமாக பெற்ற மணப்பெண்.. முத்தமிட்டு கணவனுக்கு அறிமுகம் செய்து நெகிழ்ச்சி!!

Author: Babu Lakshmanan
23 May 2023, 10:50 am

மதுரையில் தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்ற மணப்பெண்ணின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுகப்பிரியா என்பவருக்கும், நாகமலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கும் நேற்று செக்காணூரணியை அடுத்துள்ள நாகமலைப்புதுக் கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் மணப்பெண்ணான சுகப்பிரியா, தான் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு தன்னுடன் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக மணமேடையிலேயே ஜல்லிக்கட்டு காளையை ஏற்றி, காளைக்கு முத்தமிட்டு மணமகன் ராஜபாண்டிக்கு அறிமுகம் செய்ததோடு, காளையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!