பெண்கள் சைட் அடித்து ரசித்த 5 ஹேண்ட்ஸம் ஹீரோக்கள்… டாப் இடத்தில் இருப்பவர் யார் தெரியுமா?
Author: Shree24 May 2023, 7:26 pm
தமிழ் சினிமாவில் அழகான நடிகர்களை வச்ச கண்ணு வாங்காமல் பெண் ரசிகைகள் ரசித்து அவரது படத்தை பார்க்க ஆவலோடு காத்துக்கிடப்பார்கள். அதிக பெண் ரசிகைகளை கொண்ட டாப் ஹீரோக்கள் 5 பேர் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
எம்ஜிஆர்:
பழம்பெரும் நடிகரான எம்ஜிஆர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துவந்தார். அவரது அழகுக்கும், நடிப்பிற்கும் பலகோடி ரசிகர்கள் இருந்தார்கள். படத்தில் மக்களுக்கு ஏற்றவாறு நல்ல நல்ல கருத்துக்கள் கொண்ட வசனங்கள் பேசியதன் மூலம் தன் சினிமாவில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை பிடித்தார் எம்ஜிஆர். மேலும் இவர் தகதகன்னு மின்னும் தங்க மேனி கொண்டு திரையில் ஜொலித்தார். இதை பார்த்து தங்க புஷ்பத்தை சாப்பிட்டு இருப்பாரோ? என்றெல்லாம் மக்கள் பேசிவந்தார்கள்.
கமல் ஹாசன்:
நடிகர் கமல் ஹாசன் தமிழ் சினிமாவின் அழகான அறிவான நடிகராக ரசிகர்களை கவர்ந்தார். இவர் குறிப்பாக காதல் மற்றும் ரொமான்டிக் காட்சிகளில் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக நடித்து ரசிகர்களை காதலில் மூழ்கடிப்பார். அதனாலே கமல்ஹாசனுக்கு பெண் ரசிகைகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தார்கள். குறிப்பாக இவருடன் நடித்த நடிகைகள் பலர் கமல் ஹாசன் மீது காதலில் விழுந்து கிசு கிசுக்கப்பட்டுள்ளார்கள்.
அஜித்
அடுத்ததாக அஜித். ஆரம்ப காலத்தில் இவரின் அழகுக்கு இணை யாரும் இல்லை என சொல்லும் அளவிற்கு திரையில் ரசித்து ரசித்து பார்த்தார்கள். ஹேன்சம் மேன் ஆக அத்தனை பெண் ரசிகைகளையும் வளைத்துப்போட்டவர் நடிகர் அஜித். அவரது கண்ணியமான நடிப்பும் நிஜ வாழ்க்கையில் நடந்துக்கொள்ளும் விதமும் தான் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது.
சூர்யா:
சூர்யா இவரது கண் அழகுக்கு ஜோதிகா மட்டும் இல்லை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பெண் ரசிகர்களும் மயங்கிக்கிடந்தார்கள். இவரது புகைப்படத்தை பாடப்புத்தகங்களில் வைத்து சைட் அடித்து வந்த காலமும் உண்டு. அது மட்டும் அல்லாமல் அவர் ஜோதிகாவை பார்த்து பார்த்து காதலிக்கும் அழகை கண்டு இப்படி புருஷன் அமையவேண்டும் என என சாமியிடம் ரசிகைகள் வேண்டியதும் உண்டு.
அரவிந்த்சாமி:
ஆண் அழகன் அரவிந்த் சாமி சாக்லேட் பாய் ஆக பம்பாய் படம் முதல் அத்தனை பெண் ரசிகர்களையும் வளைத்து போட்டார். பெண் கேட்டு வரும் மாப்பிள்ளைகளை ரிஜெக்ட் செய்துவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் அரவிந்த் சாமி மாதிரி அழகான பையனை பாருங்கள் கழுத்தை நீட்டுகிறேன் என ரசிகைகள் பித்து பிடித்து இருந்தார்கள்.
இதில் அந்த காலத்தில் எம்ஜிஆருக்கு அதிகம் தான் பெண் ரசிகைகள் இருந்தார்கள். அதையடுத்து தற்போது வரை அஜித்திற்கு பெண் ரசிகைகள் கூட்டம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.