என் பின்னாடி ஒருத்தன் அடிச்சான்…. ரவுண்டு கட்டி பொளந்தேன் – பாலியல் சீண்டல் குறித்து வரலக்ஷ்மி!

Author: Shree
25 May 2023, 8:24 am

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

மிகவும் தைரியமாக போல்டாக இருப்பவர் வரலக்ஷ்மி இந்நிலையில் கடந்த 19ம் தேதி வரலக்ஷ்மி நடிப்பில் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் குறித்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் தனியார் சேனல் ஒன்றுக்கு தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அதில் உங்கள் வாழ்க்கையில் misbehave நடந்திருக்கிறதா என்ற கேள்விக்கு? ஆம், ஒருமுறை பப்பில் முகம் தெரியாத ஒரு நபர் என் பின்னாடி அடிச்சிட்டு ஓடப்பார்த்தான். உடனே நான் அவனை மடக்கி தர்ம அடி கொடுத்தேன். அதன் பின் அவன் மனைவி உட்பட வேற எந்த பெண்ணையும் தொட்டிருக்கமாட்டான் என கூறியுள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 418

    0

    2