பார்த்திபன் ரொம்ப Strict, சதீஷ் கூட சந்தோஷமாக இருந்தேன், ஆனா.. – உண்மையை போட்டுடைத்த சீதா..!

Author: Vignesh
25 May 2023, 11:01 am

90ஸ் களில் பிரபல நடிகையாக தென்னிந்திய திரையுலகில் வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான “ஆண் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமில்லாமல் சன் டிவி, மெகா டிவி, சூர்யா டிவி என பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இப்படி பிரபல நடிகையாக சீதாவும் நடிகர் பார்த்திபனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். அதோடு ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

seetha - updatenews360

இந்நிலையில், இருவரும் 2001ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணங்களால் 11 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்து விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பிறகு நடிகை சீதா தனது 43 வயதில், 2011ம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் சதிஷை மறுமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களும் சிறுது காலத்தில் பிரிந்து விட்டனர்.

seetha - updatenews360

நடிகை சீதாவின் சினிமா வாழ்க்கை பாழாய் போனதற்கு முக்கிய காரணமே இவருடைய திருமண வாழ்க்கை தான். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சீதா பார்த்திபன் குறித்து பேசுகையில் ‘பார்த்திபன் ரொம்ப ஸ்ரிக்ட். வெளியிலே விடமாட்டார்.

குழந்தைக்கு எக்ஸாம் இருக்கு அதை பாரு என்று சொல்லிவிடுவார் எனவும், அதன்பிறகு அழுது அடம் பிடித்து தான் போவேன் என்றும், அழுதபிறகுதான் விடுவார் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அவருடன் இருந்த ஒவ்வொரு தான் மகிழ்ச்சியாகதான் இருந்ததாகவும், பார்த்திபனை பிரிந்த பின்னர் 10 வருடங்கள் சினிமாவில் பிரேக் எடுத்த சீதா பின் 2002 ஆம் ஆண்டு மீண்டும் நடிக்க தொடங்கினார்.

seetha - updatenews360

வயதாகி விட்டதால் சீதாவுக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், சீரியலில் நடிக்கத் தொடங்கினார். இப்படி தனது இரண்டாம் இன்னிங்சை கஷ்டப்பட்டு தொடங்னிர்.

சீரியல் நடிகர் சதீஷ்சிடம் காதல் மலர்ந்து சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் பின்னர் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக 2 ம் திருமணம் செய்து கொண்டதாகவும், சதீஷ் தன் வாழ்க்கையில் வந்ததை எண்ணி சந்தோஷப்படுவதாகவும், வயதான காலத்தில் ஒரு பெண், ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது என்பதற்காகவே சதீசை திருமணம் செய்து கொண்டேன் என்று தெரிவித்து இருந்தார்.

seetha - updatenews360

ஆனால் சீதாவின் 2 ம் திருமணமும் சரியாக அமையவில்லை திருமணமான 6 ஆண்டுகளில் சதீஷ்சையும் விவாகரத்து செய்தார். தற்போது தனது தாயுடன் தனியாக சீதா வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 3374

    41

    61