அட நம்ம சிபிராஜ் பசங்களா இது?.. இப்படி ஆள் அடையாளமே தெரியாம வளர்ந்துட்டாங்களே..!

Author: Vignesh
25 May 2023, 12:00 pm

தமிழ்த் திரைப்பட நடிகர் சிபிராஜ். இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்து இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, நாய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மீண்டும் திரையுலகிற்கு நுழைந்தார்.

sibiraj-updatenews360

இதனிடையே, தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான சிபிராஜ். கடைசியாக நடித்த சில படங்களை ரசிகர்கள் பெரிதளவில் கவரவில்லை. மேலும், அடுத்ததாக நடிகர் சிபிராஜ் நடிப்பில் ரேஞ்சர், மாயோன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

sibiraj-updatenews360

முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு நடிகர் சிபிராஜ் ரேவதி என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே, சிபிராஜ் தனது குடும்பத்துடன் குன்னூருக்கு சுற்றுலா சென்று அங்கிருந்து எடுக்கப்பட்ட அவருடைய குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

sibiraj-updatenews360

இதில் சிபிராஜின் இரு மகன்களையும் பார்த்த ரசிகர்கள், சிபிராஜின் மகன்களா இவங்க, நல்லா வளர்ந்துட்டாங்களே என தெரிவித்து வருகிறார்கள்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 534

    5

    0