60 வயதில் இளம்பெண்ணை திருமணம் செய்த விஜய்யின் ரீல் தந்தை.. வைரலாகும் திருமணப் புகைப்படம்..!
Author: Vignesh25 May 2023, 7:18 pm
இந்திய சினிமாத்துறையில் ஆஷிஷ் வித்யார்த்தி கிட்டத்தட்ட 11 மொழிகளை கற்று பல மொழிப்படங்களில் நடிகராக நடித்து பிரபலமானவர். குறிப்பாக கில்லி படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையாகவும் போலிஸ் அதிகாரியாகவும் நடித்து பிரபலமானார்.
அதன்பின்னர், தில், பாபா, ஏழுமலை, தமிழன், ராமச்சந்திரா, தூம், ஆறு, குருவி, பீமா, உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்து நன்கு பரிட்சையமானவர்.
இதனிடையே, ஆஷிஷ் வித்யார்த்தி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளும் 200க்கும் மேற்பட்ட பல படங்களில் வில்லனாகவும் நடித்து உள்ளார். ஆஷிஷ் வித்யார்த்தி பின்னணி பாடகியான ராஜோஷி என்பவரை முதல் திருமணம் செய்த நிலையில் இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.
முன்னதாக ஆஷிஷ் வித்யார்த்தி யூடியூப் சேனல் மூலம் உணவு சம்பந்தமான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார், தற்போது 60 வது வயதில் ரூபாலி பருவா என்பவரை 2 ம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் ஆஷிஷ் வித்யார்த்தி 2 ம் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.