கஞ்சா போதையில் நண்பனை வெட்டிக்கொன்ற லாரி ஓட்டுநர்… தப்பியோடிய நபருக்கு போலீசார் வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
25 May 2023, 6:58 pm

ஓட்டுனர்கள் இருவருக்குள் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன் விரோதத்தில் நண்பனை சவுடுமண் குவாரியில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரகாஷ். கிருஷ்ணராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சூர்யா இருவரும் நண்பர்கள். பிரகாஷின் நகையை வைத்து சூர்யாவிற்கு பணம் கொடுத்ததில் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் அக்கரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் சவுடு மண் ஏற்ற பிரகாஷ் வந்த நிலையில். பில் போடும் கொட்டகை அருகில் மறைத்து வைத்திருந்த கத்தியால் லாரி ஓட்டுநர் சூர்யா, அவரது நண்பன் பிரகாசை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லாரியில் தப்பி ஓட முயன்ற சூர்யாவை அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டபோது லாரியை நிறுத்திவிட்டு ஓட்டம் எடுத்தார். தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் பிரகாஷ் உடலை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு உடற்கூராய் விற்கு உடலை மீட்டு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சூர்யா தனது நண்பர் பிரகாசை கஞ்சா போதையில் வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

  • members in tn assembly discussed about kadhalikka neramillai movie இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?