தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்… ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகை ரத்தால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2023, 10:18 am

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் பயணமாக புதுச்சேரி வர இருந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்துகொள்வதற்காக ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வர இருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதியின் புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதியின் வெளிநாடு பயணம் காரணமாக மற்றொரு தேதியில் புதுச்சேரிக்கு வருகை தருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது

அதே போல ஜூன் 5ஆம் தேதி தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின் பன்னோக்கு மருத்துவமனை திறந்து வைக்க ஜனாதிபதி வருகை தர உள்ளதாக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhyankar viral songs ஹாட்ரிக் வெற்றியில் சாய் அபியங்கர்…ரசிகர்களை சுண்டி இழுத்த “சித்திர புத்திரி” பாடல்..!