அனிருத்துடன் இணைந்த கவின்.. இது புதுசா இருக்கே – வைரலாகும் அட்டகாசமான அப்டேட் இதோ..!
Author: Vignesh26 May 2023, 11:38 am
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த கவின் லிப்ட் திரைப்படத்தில் நடித்து முகம் அறியப்பட்டார்.
அதன் பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார்.
இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ் அவருக்கு ஜோடியாக நடித்தார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டாடா திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி ஓடிடியிலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் வாரி குவித்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவினுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், கவின் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்தை பிரபல நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ் தான் இயக்க உள்ளாராம். சதீஷ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் தான் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில், அனிருத் தான் இதற்கு இசையமைக்க உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
முன்னதாக , அனிருத் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களான விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில், கவின் படத்துக்கு இசையமைக்க முக்கிய காரணம், நடன இயக்குனர் சதீஷ் தானாம், காரணம் என்னவென்றால், அனிருத்தின் நெருங்கிய நண்பராம். வெளிநாட்டில் அனிருத் நடத்தும் கச்சேரிகளுக்கு சதீஷ் தான் மாஸ்டராக இருந்து அனைத்தையும் செய்து கொடுக்கிறாராம்.
மேலும், சதீஷ், டான்ஸ் மாஸ்டராக மட்டுமின்றி விஜய்யின் பீஸ்ட், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா, சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.