குடிபோதையில் ஏற்பட்ட வாய் தகராறு.. நண்பனை கொலை செய்து பகை தீர்த்த சக நண்பர்கள் ; போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
26 May 2023, 4:23 pm

சோழவரம் அருகே குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக இருசக்கர வாகன பழுது பார்க்கும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தது வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே கோணி மேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (25). இவர் இருசக்கர வாகன பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். வெங்கடேசனுக்கும், அவரது நண்பர் நரேஷ்குமாருக்கும் மது அருந்தும் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நரேஷ் குமார் அவரது நண்பர்களான தினேஷ் மற்றும் கரன் ஆகியோருடன் சேர்ந்து வெங்கடேசனை தலை மற்றும் கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக நான்கு இடங்களில் வெட்டி கொலை செய்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சோழவரம் காவல்துறையினர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு உடலை அனுப்பி வைத்தது. பின்னர், நரேஷ்குமார், தினேஷ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான கரணை தேடி வருகின்றனர்.

டந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த வெங்கடேசனும், நரேஷ்குமாரும் அறிமுகமாகிய நிலையில், கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை இன்றி இருந்து வந்துள்ளனர். இந்த சூழலில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் இருவரின் பழக்கத்தை தொடர்ந்துள்ளனர்.

அப்போது, மது அருந்த சென்ற இடத்தில் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் ஏற்பட்டதால் நரேஷ் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேசனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 362

    0

    0