யோகி பாபு போலவே இருக்கும் நபர்.. – அச்சு அசல் அப்படியே இருக்காங்களே பா..!
Author: Vignesh26 May 2023, 6:11 pm
கடந்த ஆண்டு வெளியான முக்கால்வாசி படங்களில் யோகிபாபு தான் நடித்திருந்தார். தற்போது முன்னணி ஹீரோக்களை விட இவர் தான் பிசியாக உள்ளார். மேலும் ஒரு நாளைக்கு ஆறு, ஏழு படத்திற்கு சூட்டிங் செல்லும் அளவிற்கு பிஸியாம். தற்போது ஹீரோக்களின் கால்ஷீட் கூட கிடைத்து விடும் போல யோகிபாபுவின் கால்ஷீட் கிடைப்பது ரொம்ப கஷ்டமா இருக்காம்.
தமிழ் சினிமாவில் தற்போது யோகிபாபு, வடிவேலின் இடத்தை பூர்த்தி செய்து வருகிறார் என்றும் சிலர் கூறி வருகின்றனர். யோகி பாபு போறபோக்கில் அசால்டாக அடிக்கும் காமெடிக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது ஒரு சில படங்களில் யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதற்கு ஒரு படி மேலாக தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் யோகி பாபு.
இதனிடையே, அச்சு அசலாக யோகி பாபு போலவே இருக்கும் பெண் வீடியோ ஒன்று வைரல் ஆகி இருக்கிறது. அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.