இது FAKE NEWS… நல்ல போட்டோவா Use பண்ணுங்க : கிண்டல் செய்த கிருத்திகா… ரியாக்ஷன் கொடுத்த உதயநிதி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2023, 9:47 pm

சமீபத்தில் அமலாக்கத்துறை சார்பில் லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கல்லல் பவுண்டேஷன் உள்பட பல நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதாவது கல்லல் நிறுவனத்துக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையே பணப்பரிமாற்றம் இருந்து வந்தது.
இந்நிலையில் தான் கல்லல் நிறுவனம் மோசடி செய்தாக லைகா சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை நுழைந்தது. இதையடுத்து தான் அமலாக்கத்துறை சார்பில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 8 இடங்களில் சோதனைகள் நடந்தன. இந்த சோதனையின்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தான் சோதனைக்கு உள்ளான கல்லல் பவுண்டேஷனுக்கும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உதயநிதி அறக்கட்டளையின் சார்பில் வழக்கறிஞரை அழைத்து அமலாக்கத் துறை விளக்கங்களைப் பெற்றது.
இதற்கிடையே தான் அமலாக்கத்துறை சார்பில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் உள்ள ரொக்கப்பணம் மற்றும் அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை முடக்கி உள்ளார்.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛கடந்த 25.5.2023ல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தான் அமலாக்கத்துறையின் ட்விட்டர் பதிவை பார்த்த பலரும் உதயநிதியின் மனைவியான கிருத்திகா உதயநிதியின் பெயரில் அறக்கட்டளை இருப்பதாகவும், அதன் சொத்துகள் மற்றும் ரொக்கப்பணம் முடக்கப்பட்டு இருப்பதாகவும் இணையதளங்களில் செய்திகளை பரப்பினர்.

இதனை பார்த்த கிருத்திகா உதயநிதி, தனது ட்விட்டர் பக்கத்தில் போலி செய்திகள் வெளியிடுவோரை கிண்டல் செய்திருந்தார். இதுதொடர்பாக கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛என்னைப் பற்றி பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். செய்தியில் குறைந்தபட்சம் நல்ல போட்டோவையாவது பயன்படுத்துங்கள்” என கிண்டலடித்து இருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவை பார்த்த அமைச்சர் உதயநிதி உடனடியாக ரியாக்சன் செய்திருந்தார். அதாவது கிருத்திகா உதயநிதியின் ட்விட்டர் பதிவுக்கு அமைச்சர் உதயநிதி சிரிக்கும் ஸ்மைலி ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதனை ஸ்கீரின்ஷாட் எடுத்து திமுகவினர் இணையதளத்தில் பரப்பி வருகின்றனர். இது தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

  • Tamil actress Sana Khan updates பிரபல நடிகை மீண்டும் கர்ப்பம்..கோலிவுட்டில் பரபரப்பு..!
  • Views: - 516

    0

    0