ஐடி ரெய்டின் போது பணி செய்ய விடாமல் தடுத்த திமுகவினர் : அமைச்சரின் ஆதரவாளர்கள் 8 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2023, 11:43 am

கடந்த 26ம் தேதி கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்தனர்.

சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது இப்பகுதியில் திமுகவினர் நூற்றுக் கணக்கானோர் திரண்டனர். சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தள்ளு, முள்ளும் ஏற்பட்டது.

அப்போது, அதிகாரிகள் சோதனைக்கு வந்த கார் கண்ணாடியை உடைததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினரும் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வருமான வரித்துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுகவினர் 6 பேரை கரூர் மாநகர போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல தான்தோன்றி மலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தற்பொழுது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும், இது தொடர்பாக பலரும் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?