இன்னும் 10 நாட்களில் ஒட்டுமொத்த திமுகவே கதறப் போகுது… ஐடி ரெய்டு குறித்து அதிமுக சொன்ன முக்கிய தகவல்..!!

Author: Babu Lakshmanan
29 May 2023, 2:38 pm

கோவை ;வருமானவரித்துறை சோதனை முடிந்து அறிக்கை வெளியிடும் போது அனைவரும் கதறுவார்கள் என்று அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்சுணன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ள சாராயம், போதைப் பொருட்கள் புழுக்கம் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் இந்த ஆட்சியில் நடைபெறுவதாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர மாவட்ட செயலாளர் அம்மன் அர்சுணன் தலைமை வகித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், முன்னாள் மேயர் வேலுச்சாமி உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மன் அர்சுணன் கூறியதாவது :- இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளது? அதுவரை வந்த வருமானம் எத்தனை என்பதை அரசு தெரியப்படுத்த வேண்டும். வருமானவரித்துறை அதிகாரிகளையே அடிக்க செல்லும் தைரியம் அவர்களுக்கு (திமுக) தான் உள்ளது. நாங்கள் ஏதாவது செய்தால் தமிழக அரசு எங்களை கைது செய்யும் போது, டெல்லி அரசாங்கம் இன்னும் ஏன் காத்துக்கொண்டிருக்கிறது.

மேலும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்துதல் என்ற சட்டம் தற்போது எங்கே சென்றது? வருமானவரித் துறை சோதனைக்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அமைச்சர் கூறுகையில், எதற்காக அவரது தம்பியின் வீட்டில் சோதனை நடத்தப்படும் பொழுது அதிகாரிகளை தாக்கினார்கள்?.

இன்னும் 10 நாட்களில் சோதனை விவரங்கள் எல்லாம் தெரியவரும். அப்போது அனைவரும் கதறுவார்கள். திமுகவின் தோழமை கட்சிகள் எல்லாம் மாதம்மாதம் கப்பம் வருவதால் அமைதியாக இருக்கிறார்கள். வைகோ எல்லாம் எங்கே சென்றார்?. என கேள்வி எழுப்பினார்.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!