ஆடியோவை லீக் செய்தது இவரா.. உங்கள நம்பி தானே சொன்னேன் சம்யுக்தா கதறல்..!
Author: Vignesh29 May 2023, 3:58 pm
சீரியல் நடிகை சம்யுக்தா குறித்து ஆடியோ ஒன்றை கணவர் விஷ்ணுகாந்த் வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோவில் சம்யுக்தா தன்னைப் பற்றிய ரகசியங்களை ஒரு நபரிடம் அண்ணன் என்று கூறி அந்த நபரிடம் தெரிவித்து இருப்பார். அவர் பிரபல சீரியல் இயக்குனர் தான் என்று சம்யுக்தா தற்போது தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சம்யுக்தா மற்றும் அவருடைய கணவர் விஷ்ணுகாந்த் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து இருந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மேலும், விஷ்ணுகாந்த் தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போதும் சம்யுக்தா ரவி என்ற நபரோடு பேசிக் கொண்டிருந்தார் என்று தனக்கு ஒரு நபர் அனுப்பிய ஆடியோ என ஆடியோ ஒன்றை லீக் செய்து உள்ளார்.
அந்த ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அண்ணன் என்று கூறிய நபர் அவரும் பல அட்வைஸ்கள் கொடுத்திருந்தார். ஆனால் கடைசியில் சம்யுக்தா பேசியதை எல்லாம் ரெக்கார்டு செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் சம்யுக்தா பேசிய ஆடியோவில் விஷ்ணுகாந்தை காதலித்துக் கொண்டிருக்கும் போது ஏற்கனவே சம்யுக்தா தன்னோடு நடித்த நிறைமாத நிலவே சீரிஸில் நடித்த ஆர் ஜே ரவியோடு பேசிக்கொண்டிருந்தது பற்றியும் அந்த ஆடியோவில் பேசி உள்ளார்.
இது மட்டும் இல்லாமல் ஆர் ஜே ரவியை தான் காதலித்ததும், அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது குறித்தும் பல தகவல்களை அந்த ஆடியோவில் தெரிவித்து இருந்தார். தற்போது ஆடியோவில் சம்யுக்தாவுடன் பேசிய அந்த அண்ணன் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.
அதில் தான் தன் அண்ணனா நெனச்சி NINI டைரக்டர் ஹரிஷ் கிட்ட இதையெல்லாம் சொன்னேன் என்றும், ஆனால் அவர் அதை கேவலமா ரெக்கார்ட் பண்ணி விஷ்ணுகாந்த்க்கு அனுப்பி அவர் அதை மீடியால கொடுத்து இப்போ பெரிய நியூஸா போய்கிட்டு இருக்கு என்று தெரிவித்து இருக்கிறார். இந்தப் பதிவுக்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு அண்ணனாக நினைத்து ஒரு பெண் பேசியதை எல்லாம் எவ்வளவு வக்கிரம் இருந்திருந்தால் இதை ரெக்கார்ட் செய்து வைத்திருப்பார் என்று சிலர் தெரிவித்தும், இன்னும் ஒரு சிலர் இப்படி ரெக்கார்டு செய்து வைத்ததால்தான் சம்யுக்தா மீது தப்பு இருக்கும் விஷயமே வெளியே தெரிந்தது இல்லை என்றால் எல்லோரும் விஷ்ணுவை தான் குறை சொல்லி இருப்பார்கள் என்றும் இருதரப்பட்ட கருத்துக்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.