வறுமையால ரூ.100 கோடி வீட்டை விற்று நடுத்தெருவுல நின்னேன்..- பாண்டியன் ஸ்டோர் நடிகை உருக்கம்..!

Author: Vignesh
30 May 2023, 7:38 pm

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக பல சீரியல்கள் இல்லத்தரசிகளை கட்டுப் போட்டு வைத்துள்ளது.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர் ’. வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை நடிகைகளுக்கு தான் இப்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

santhi villiams-updatenews360

தற்போது, பலர் முதலில் தங்களது பயணத்தை சீரியல் பக்கமே முதலில் தொடங்க விரும்புகிறார்கள். நாயகிகளை தாண்டி வில்லி ரோலில் நடிப்பவர்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பார்வதி வேடத்தில் சாந்தி வில்லியம்ஸ் நடித்து அசத்தி வருகிறார் .

சாந்தி வில்லியம்ஸ் 12 வயதில் நடிக்க தொடங்கினர். 1999ம் ஆண்டில் இருந்து சின்னத்திரையில் சாந்தி வில்லியம்ஸ் நடிக்க தொடங்கினார். மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை, பூவே உனக்காக, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் என கலக்கி வருகிறார்.

santhi villiams-updatenews360

சாந்தி வில்லியம்ஸ் 1979ம் ஆண்டு மலையாள கேமராமேன் ஜெ வில்லியம்ஸை திருமணம் செய்தார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர் ஒரு பேட்டியில், தனது கணவருக்கு கார்கள் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், குழந்தைகளாகவே பார்ப்பார்.

santhi villiams-updatenews360

அவருக்கு, ஏகப்பட்ட கார்கள் இருந்தது, இவர் எங்கு போக வேண்டும் என சொல்கிறாரோ அந்த திசையில் இருக்கும் காரை எடுத்து டிரைவர் காத்திருப்பார் என்றும்,1996 க்கு முன்பு படங்களை எடுத்து நஷ்டமாகிவிட்டது எனவும், இதனால் கே.கே.நகரில் இருந்த தனது சொந்த வீட்டை இழந்து குழந்தைகளுடன் தானும் அவரும் நடுரோட்டில் நின்றோம் என்றும், அன்று தாங்கள் இழந்த வீட்டின் இன்றைய மதிப்பு ரூ 100 கோடி எனவும், பழைய நிலைமையை அடைய கடுமையாக கஷ்டப்பட்டு உழைத்து வருவதாக சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 820

    2

    3